சிறுகனூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதல்: வாலிபர் பலி

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே வாலிபர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2024-04-01 14:17 GMT

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான கண்ணன்.இவர் நேற்று தனது மோட்டார் பைக்கில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நெடுங்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் பைக் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த கண்ணன் படுகாயம் அடைந்தார். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News