மேல்மலையனூர்: ஒன்றியக்குழு கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.;
Update: 2024-02-03 07:44 GMT
ஒன்றிய குழு கூட்ட
விழுப்புரம் மாவட்டம் ,மேல்மலையனூர் ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார கல்விக்குழு தலை வர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் ஒன்றிய பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் குலோத்துங்கன் நன்றி கூறினார்.