மாநில அமைச்சர்களை மிரட்டுகிறது மத்திய அரசு - கே.என்.நேரு

இந்தியாவில் முதல்வர்களே டெல்லி சென்று போராட வேண்டியுள்ளதாகவும் , அமைச்சர்களை தினந்தோறும் மத்திய அரசு மிரட்டுவதாகவும், அமைச்சர்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் , பா.ஜ.க வினருக்கே தெரியும் தமிழகத்தில் வெற்றி முடியாது என்று, அதனால் தான் திமுகவினர் எளிதாக வெற்றி பிறகு கூடாது என நெருக்கடி தருகின்றனர் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Update: 2024-02-18 04:13 GMT

அமைச்சர் கே.என்.நேரு

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் , பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் பெருந்துறை அருகேயுள்ள சரளையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு , இதுவரை இல்லாத வகையில் இந்த முறை மத்திய அரசு தமிழக அரசை மிரட்டுகிறது என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் அறிவிப்போடு நிற்கிறது என்றார். தற்போது இந்தியாவில் முதல்வர்களே டெல்லி சென்று போராட வேண்டியுள்ளதாகவும் , அமைச்சர்களை தினந்தோறும் மத்திய அரசு மிரட்டுவதாகவும் , அமைச்சர்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என்ற அமைச்சர் கே.என்.நேரு , பா.ஜ.க வினருக்கே தெரியும் தமிழகத்தில் வெற்றி முடியாது என்பதால் திமுகவினர் எளிதாக வெற்றி பிறகு கூடாது என நெருக்கடி தருகின்றனர் என்றார்.
Tags:    

Similar News