மத்திய அமைச்சர் அமித்ஷா குமரி வருகை ரத்து

மத்திய அமைச்சர் அமித்ஷா குமரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

Update: 2024-04-04 15:22 GMT

அமித் ஷா 

கன்னியாகுமரி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (5-ந்தேதி) குமரி மாவட்டத்துக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது.  அவர் மாலை 4 மணிக்கு தக்கலையில் நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும்,

அவர் அழகிய மண்டபத்தில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு-ஷோ செல்ல பாரதிய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.      இதையடுத்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதுகாப்பு காரணங்களால் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.      இந்த நிலையில் நேற்று அமித் ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.. ஆனால் சில மணி நேத்தில் மீண்டும் தென்காசி மற்றும் குமரி மாவட்ட நிகழ்ச்சிகளில் நாளை பங்கேற்பதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.        இதற்கிடையில் இன்று மீண்டும் அமித் ஷாவின் நாளைய 5-ம் தேதி  வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News