அகரம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் சங்க செயற்குழு கூட்டம்
அகரம் கிராமத்தில், ஊராட்சி செயலாளர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் பொன்னுவேல் தலைமை தாங்கினார். இதில், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பொதுமக்களிடம் விசாரணையில் ஊராட்சி செயலாளர்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். ஊராட்சி பணிகளில் எவ்வித தொய்வு ஏற்படாமல் ஊராட்சி செயலாளர்கள் செயல்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழக அரசு போனஸ் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலையில் டி.என்.பாஸ்மூலம் சம்பளம் வழங்குவதில் மிகவும் சிரமம் இருப்பதை சரிசெய்ய இணையதளம் அதிக வேகத்துடன் செயல்பட தமிழக அரசு செயல்பட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். இதில், ஒன்றிய தலைவராக பொன்னுவேல், ஒன்றிய செயலாளராக செளந்தர், ஒன்றிய பொருளாளராக குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.