சாக்கோட்டை அருகே சீரமைக்கப்படாத சாலை: மாணவர்கள் அவதி

சாக்கோட்டை அருகே சாலை சீரமைக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்

Update: 2024-06-22 15:42 GMT

ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தி.சூரக்குடி மட்டுமின்றி சொக்கம்பட்டி, நங்கம்பட்டி பூவான்டிபட்டி பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சொக்கம்பட்டி, நங்கம்பட்டி பூவான்டிபட்டி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பைபாஸ் பகுதியை ஒட்டிய சாலையை பள்ளிக்குச் செல்ல பயன்படுத்தி வந்தனர். இச்சாலையானது கடந்த சில வருடங்களுக்கு முன் மண்சாலையாக அமைக்கப்பட்டது. இச்சாலையின் நடுவில் வரத்து கால்வாய் பாலம் உள்ளது.

இந்த பாலத்தில்கருவேல மரங்கள் மற்றும் குப்பை அடைத்து கொண்டதாலும், கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டதாலும் தண்ணீர் செல்ல வழி இல்லை. இதனால் மண் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலையே கரைந்து போனதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சாலையை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News