பாதுகாப்பின்றி இருந்த குடிநீர் தொட்டி: ஆட்சியர் அறிவுரை
பாதுகாப்பின்றி இருந்த குடிநீர் தொட்டி பார்த்து ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் சாலவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவந்தார் அரசு தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் சர்ச்சைக்கு உள்ளான பொருட்கள் கலந்துள்ளதாக திடீர் புகார் எழுந்து மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த ஆட்சியர் கலைச்செல்வி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.மேலும் அந்த குடிநீர் தொட்டி போதிய பாதுகாப்பு இன்மை காரணமாக உடனடியாக அதனை அகற்றி விட உத்தரவுமீட்டு அதனை அதிகாரிகள் பின்பற்றி அதனை அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் இன்று வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட தம்மனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட பின் ஆட்சியில் அங்குள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பின் கை கழுவும் தொட்டி முறையான பாதுகாப்பு இன்றி காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து அலுவலர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுத்து மற்றும் ஒரு நிகழ்வை தவிர்க்க அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அங்கன்வாடியில் உணவருந்தி கொண்டிருந்த குழந்தைகளிடம் சிறிது நேரம் உரையாடியும் , உணவு தரத்தையும் உண்டு சோதித்தார். அதன் பின் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என குழந்தைகளின் தாய்மார்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.