சாக்கோட்டையில் அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி

சாக்கோட்டையில் அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Update: 2024-06-28 05:24 GMT

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சாக்கை வீரசேகர உமையாம்பிகை திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனித் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் அரசு அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு திடலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பிடிக்க வீரர்கள் பாய்ந்தனர். இதில் பங்கேற்ற காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அது போல் கட்டுமாடுகளாக ஆங்காங்கே 300க்கும் மேற்பட்ட மாடுகள் அவிந்து விடப்பட்டது. நான்கு புறமும் சிதறி ஓடிய காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Tags:    

Similar News