புரிசையில் தரம் பிரிக்காமல் குப்பை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

புரிசை ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-04-16 15:45 GMT

எரிக்கப்படும் குப்பைகள்

காஞ்சிபுரம் அடுத்த, புரிசை ஊராட்சியில், புரிசை, புரிசை காலனி, நீலிமேடு, தோப்பு பகுதி ஆகிய நான்கு துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பை, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, இரு விதங்களில் தரம் பிரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தி வருகிறது.

இருவித குப்பை தரம் பிரிக்க, 15வது நிதிக்குழு மானியத்தில் உரக்குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. முறையாக குப்பை தரம் பிரிப்பதில்லை. மாறாக திறந்தவெளியில் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால், கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, மாசு கலந்த காற்றை சுவாசிக்க வேண்டி உள்ளது. எனவே, புரிசை ஊராட்சி நிர்வாகம், குப்பையை முறையாக கொட்டி தரம் பிரிக்க வேண்டும்.

ஆங்காங்கே குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags:    

Similar News