உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-06-06 13:53 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட ஆட்சியரிடம் மனு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலைப் பள்ளியாகவே இருந்து வருகிறது. இப்பள்ளியில் ஏர்வாடி,விச்சூர்,குரும்பூர்,கிடாமங்கலம்,நம்பிக்குடி, கணபதிபுரம், பரமநல்லூர்,இடையாத்தங்குடி, சேஷமூலை கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளி அமைந்துள்ள இடம் நத்தம் வகைபாடு கொண்ட மந்தைவெளி அரசு புறம்போக்கு என வருவாய்த்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.கணபதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட பள்ளி அமைந்துள்ள இடத்தை நாகப்பட்டினம் வருவாய் வட்டாட்சியர் முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு பதிவு செய்து கொடுத்தால் தான் பள்ளி தரம் உயர்த்தித் தரப்படும் என கல்வித்துறையில் தெரிவித்துள்ளனர்.

எனவே நாகப்பட்டினம் வட்டாட்சியர் அவர்கள் 9 கிராம மாணவர்கள் பயனடையும் வகையில் பள்ளி அமைந்துள்ள இடத்தை நாகூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய நாகப்பட்டினம் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் நாகை மாவட்ட ஆட்சியர்,மாவட்ட வருவாய் அலுவலர்,மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று மனு அளித்தனர்.

Tags:    

Similar News