திருமருகல் ஆரம்பசுகாதார நிலையத்தில் டாக்டர்நியமனம் செய்ய வலியுறுத்தல்
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் அருள்தாஸ்,மாவட்ட தலைவர் நன்மாறன்,மாவட்ட பொருளாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு,கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் லெனின்,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி.விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
போராட்டத்தில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்,போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும்,தரமான மருந்து மாத்திரைகள் மற்றும் விஷமுறிவு தடுப்பு ஊசிகளை அதிகளவில் கைவசம் வைத்திட வேண்டும்,
பிரசவ காலத்தில் மருத்துவம் பெற போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.