திருச்செங்கோட்டில் நகர்மன்ற அவசரக் கூட்டம்
திருச்செங்கோடு நகர்மன்ற அவசரக் கூட்டம் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பிரபு தலைமையில் நடந்தது.
திருச்செங்கோடு நகர்மன்றத்தின் அவசர கூட்டம் நகர மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆணையாளர் சேகர் முன்னிலை வகித்தார். திருக்குறளை வாசித்து நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்களின் மீது பேசிய நகர் மன்ற உறுப்பினர்கள் கூறியதாவது பத்தாவது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜவேல்: திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் பகுதியில் மேற்கு புறமாக உள்ள கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது அங்கு உள்ள மணிக்கூண்டு செயல்படாமல் உள்ளது. அதனை சீரமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் . நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு:அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கு கூறினார்.
முன்னதாக பேசிய நகராட்சி ஆணையாளர் சேகர் 33 வார்டு உறுப்பினர்களில் 17 வார்டுகளை பெண் உறுப்பினர்களாக கொண்டு மகளிருக்கான 50% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியுள்ள திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். தொடர்ந்து நகர்மன்ற தலைவர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நகர மன்ற ஒரு பெண் உறுப்பினர்கள் அனைவரும் கேக் வெட்டி மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.