உருமர் கோவில் கும்பாபிஷேக விழா

மேலூர் உருமர், பெரமர், தர்மர் ஆலயத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Update: 2024-01-25 05:03 GMT
புதுக்கோட்டை மாவட்டம் மேலூரில் பல நூறு ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் ஸ்ரீ உருமர், பெரமர், தர்மர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தை புதுப்பிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது இதனை அடுத்து இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காசி ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை மங்கல இசை முழங்க கும்பகலசத்திற்கு ஊற்றி வழிபாடு செய்தனர். அதன் பிறகு ஸ்ரீ உருமர் சுவாமிக்கு பஞ்சமுக தீர்ப்பாரனை காண்பிக்கப்பட்டது இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்*
Tags:    

Similar News