உசிலம்பட்டி விவசாயிகள் கடும் வேதனை
உசிலம்பட்டி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த கம்பு பயிர்கள் கனமழை மற்றும் காட்டுப் பன்றியால் சேதடைந்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாசி பட்டத்தின் விவசாயமாக சுமார் 60 ஏக்கர் கம்பு பயிர் சாகுபடி செய்துள்ளனர்., இந்நிலையில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இந்த கம்பு பயிர்கள், கடந்த வாரம் பெய்த கனமழையால் விளைநிலத்திலேயே சாய்ந்து சேதமடைந்தது. சாய்ந்த நிலையிலேயே உள்ள இந்த கம்பு பயிர்களை காட்டுப் பன்றிகளும் சேதப்படுத்தியதால், மண்ணோடு மண்ணாக சாய்ந்து கிடக்கும் கம்பு பயிர்கள் அனைத்தும் மீண்டும் முளைப்பு தன்மை ஏற்பட்டுள்ளது.,
இதனால் கம்பு பயிர்கள் பயிரிட்டதற்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்., இந்நிலையில் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட கம்பு பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,