ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெளிநடப்பு போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரின் அராஜக போக்கினை கண்டித்தும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்து. பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஊத்தங்கரையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வெளிநடப்பு போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் சுப்பிரமணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் நந்தகுமார் கண்டன உரையாற்றினார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் தீன தயாளன் அராஜக போக்கினை கண்டித்து, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்து. பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். .