உத்தமசோழபுரம் : ரூ.3.25 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ. 3.25 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.

Update: 2024-06-27 01:42 GMT

கொப்பரை தேங்காய்

சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் இணையதளம் வாயிலாக நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.65.50-க்கும் அதிகபட்சமாக ரூ.93.20-க்கும் விற்பனையானது. மொத்தம் 3.78 டன் அளவுள்ள 110 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.
Tags:    

Similar News