ஆயுஷ் பிரிவுகளில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டம், ஆயுஷ் பிரிவுகளில் உள்ள காலிப்பணிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-02-24 04:10 GMT

வேலைவாய்ப்பு 

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. மாவட்ட திட்ட மேலாளர் (காலிப்பணியிடம்-1), கல்வித்தகுதி: சித்த மருத்துவ பட்டப் படிப்பில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் கனிணி தொடர்பான சான்றிதழ் படிப்பு வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.40,000- 2. தரவு உதவியாளர் (காலிப்பணியிடம்-1) கல்வித்தகுதி: இளங்கலை பட்டப் படிப்புகள் (B.Sc (IT)/BCA/BBA / B.Tech (CS)) மற்றும் கனிணி தொடர்பான சான்றிதழ் படிப்பு வயது: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒப்பந்த மாத ஊதியம்: ரூ. 15,000- இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. எக்காரணம் கொண்டும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (www.thoothukudi.nic.in) வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவண நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தூத்துக்குடி - 628 003 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:09.03.2024 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Tags:    

Similar News