செவித்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு பள்ளியில் காலிபணியிடம்

சேலம் மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு பள்ளியில் மேல்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு வின்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-07 07:41 GMT

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் சேலம், சூரமங்கலம் ஜங்சன் அருகில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் அறிவியல் மற்றும் வரலாறு ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய கல்வி தகுதியுடன் செவித்திறன் குறைபாடு மாணவர்களை கற்பிப்பதற்காக டிப்ளமோ அல்லது பி.எட் படிப்பு (சிறப்புகல்வி) மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சியுடன் செவித்திறன் குறைபாடு மாணவர்களை கற்பிப்பதற்காக டிப்ளமோ அல்லது டி.எட் (சிறப்புகல்வி) உள்ளிட்ட கல்வி தகுதியுடன் தற்காலிகமான பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இங்கு நியமிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த மதிப்பூதியமாக ரூ.15 ஆயிரம் மற்றும் துணை விடுதிக்காப்பாளருக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்படும். எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய கல்வி சான்றிதழ்களுடன் தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சீனிவாசாகாலனி, சூரமங்கலம் என்ற முகவரியில் வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News