வடபழனி முருகன் கோவில் தேரோட்டம்: தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 16:10 GMT
தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
சென்னை வட பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா காலை விமரிசையாக தொடங்கியது. அரோகரா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
மேள தாளம் முழங்க பக்தர்கள் ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து தேரில் எழுந்தருளிய சாமியை வழிபட்டனர்.