வடசென்னிமலை பாலசுப்பரமணி கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருத்தேர் விழா நடந்தது.

Update: 2024-03-25 13:27 GMT

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருத்தேர் விழா நடந்தது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர்விழா முன்னிட்டு கடந்த மாதம் 17 ந் தேதி விக்னேஸ்வரர் பூஜை,வாஸ்து பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மூலவர் ஏற்றப்பட்டு அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் முருகனுக்கு அரோகரா என்ற கோசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதியில் வழியாக சென்றடைந்தது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Tags:    

Similar News