வடலூர் சர்வதேச மையம் - பாமக மனு
வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியை ஆக்கிரமித்து சர்வதேச மையம் கட்ட கூடாது என வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பாமகவினர் மனு அளித்தனர்.;
Update: 2024-03-07 06:55 GMT
மனு அளிக்க வந்த பாமகவினர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் உள்ள பெருவெளியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் சந்தித்து மனு அளித்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.