மதுரை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
மதுரை அருகே கருப்பாயூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு, வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை அருகே கருப்பாயூரணியில் பாண்டி முனீஸ்வரர் உற்சவ விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் இருந்த மொத்தம் 40காளைகள் கலந்து கொண்டது. ஒன்பது வீரர்கள் அடங்கிய 12 குழுக்களாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாடு பிடி வீரர்களுக்கும் மாட்டிற்கும் 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு மஞ்சுவிரட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற காளைக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்க பணம், அண்டா, குத்துவிளக்கு, சைக்கிள் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டுவில் பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் காளைகள் அவிழ்க்கப்பட்டது. அதே போன்று சசிகலா பெயரிலும், அமைச்சர் மூர்த்தி பெயரிலும் காளைகள் விளையாடியது. மஞ்சுவிரட்டுவை கண்டு களிக்க சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே போன்று அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் மருத்துவ உதவியும் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக களம் இறங்கும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.