கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்றது.

Update: 2024-05-25 04:11 GMT

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்றது.


மதுரையின் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகவும், 47வது வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த மே 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் மாலையில் சிம்ம, அனுமான், கருட, சேஷ, யானை, தங்கச்சிவிகை, பூச்சப்பரம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. இந்த நிலையில் விழாவின் 9 ஆம் நாளான பிரமோற்சவத்தின் சிகர நிகழ்வான தேரோட்டம் நிகழ்வு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்வானது. கோவில் தேர்முட்டியில் இருந்து புறப்பட்டு தெற்கு வெளி வீதி வழியாக சென்று திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி வழியாக வந்து தேர்முட்டியை அடையும். மேலும் இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம்பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News