சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொண்டாட்டம்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-05-20 09:34 GMT

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில், உள்ள பல ஆண்டுகள் பழமை வாய்ந்த, புராதான வரலாறு கொண்ட ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவிலில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா கடந்த மே - 7 ஆம் தேதி பூச் சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இத் திருவிழாவையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் நிகழ்ச்சிகளில் ஒன்றான தீச்சாட்டியேந்தி அளவு குத்து நேர்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி மே-19ம் தேதி மாலை நடைபெற்றது, இதில் ஆண், பெண் பக்தர்கள், நாக்கு, கண்ணம், இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அலகு குத்தியும், கைகளில் தீச்சட்டி ஏந்தியும், மேல தாளம் முழங்க ஊர்வலமாக நடைமாடிய படி சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

இதில் சிறுவர்கள் குழந்தைகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கையில் வேப்பிலை எடுத்து நடனமாடி சென்ற நிகழ்வில், ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு வேண்டுதலும் வைத்தனர். இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் மே-23. தோதி நடைபெற உள்ளது. என்பது. குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News