மக்களின் அன்பை பெற்றவர் ஈரோடு எம்.பி -வைகோ!
நலமுடன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்-வைகோ.
Update: 2024-03-25 07:06 GMT
கோவை: மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஈரோடு எம்.பி.கணேஷமூர்த்தியை பார்த்து திரும்பிய பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில் கணேசமூர்த்தி அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர் எனவும் சட்டமன்ற உறுப்பினர் ஆகி மக்களின் அன்பையும் பெற்ற அவர் நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனவும் இம்முறை துரை வைகோவை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் எனவும் கணேசமூர்த்திக்கு அடுத்த வாய்ப்பு பார்ப்போம் என்று கூறியபோது அதற்கு நான் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்தார். பின்னர் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டதில் 99 சதவிகிதம் பேர் கணேஷமூர்த்திக்கு ஆதரவாக அவரை நிறுத்த வேண்டும் என்றும் இரண்டு சீட்டுகள் வாங்குங்கள் ஒன்றை கணேசமூர்த்திக்கும் ஒன்றை துரை வைகோவுக்கு கொடுப்போம் என்று கூறினார்கள்.அவ்வாறே செய்யலாம் என்று தெரிவித்ததாகவும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒரு வருடத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் அவரை எம்எல்ஏ வாக நிற்க வைக்கலாம் என்று எண்ணினேன் எனவும் இல்லையெனில் அதை விட பெரிய பதவியை ஸ்டாலினிடம் கேட்டு அவருக்கு வாங்கி தரலாம் என்று பார்ப்போம் என்று நினைத்தேன் என்றார். சட்டமன்ற தேர்தல் வரும்பொழுது அவருக்கு உண்டான காயம் ஆறிவிடும் என நினைத்த நிலையில் அவர் தென்னை மரத்திற்கு போடுகின்ற நஞ்சினை கலந்து குடித்தவர் அங்கு வந்த கபிலனிடம் இதைக் கூறி நான் போய் வருகிறேன் என்று கூறி சொல்லி உள்ளார்.இதனை தொடர்ந்து உடனடியாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்குஅங்கு முதலுதவி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது பின்னர் கோவைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்து வருவதாக கூறியவர் அனைவரும் அவர் நலமுடன் திரும்பி நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள் என்றார்.இரண்டு நாள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும் அப்போது தெரிவித்தார்.