வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
வாலீஸ்வரர் கோவிலில் 200 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-02-01 10:41 GMT
விழுப்புரம் அடுத்த கோலியனூர் பகுதியில் அமைந்துள்ள பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த வாலீஸ்வரர் திருக்கோவிலில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் எம்.எல்.ஏ லட்சுமணன் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வளவனூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.