வள்ளலார் ஆலய பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் வேண்டுகோளின் படி பக்தர்களுக்காக வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 07:33 GMT
பக்தர்களுக்கு நீர் மோர்
மயிலாடுதுறையில் குரு பரிகார ஸ்தலமான தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளானையின் வண்ணம் இன்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலய சிவாச்சாரியார் பாலசந்திர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அக்னி நட்சத்திரம் நேற்று முதல் துவங்கிய நிலையில் ஆலயத்தில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தலில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.