வல்லாங்குளத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வல்லாங்குளத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-15 06:19 GMT

தீமிதி திருவிழா

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வல்லாங்குளத்து மாரியம்மன் கோயில் உற்சவம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் கடந்த 31ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதித் திருவிழா ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று நடைபெறும் இந்த ஆண்டு நேற்று (14ம் தேதி) இரவு தீமிதித் திருவிழா நடைபெற்றது.

தீமிதித்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு பால் காவடி அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை 7 மணிக்கு தீமிதிக்கும் பக்தர்கள் அரசானி குளத்தில் இருந்து பால் குடங்களுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து பின் கோயில் முன் அமைக்கப் பட்டிருந்த தீக் குண்டத்தில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்துக் கொண்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப் பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம சமுதாயத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News