பெண்கள் வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடி அசத்தல்

சங்ககிரி: பாரம்பரிய உடை அணிந்து பெண்கள் வள்ளிக்குமே ஆட்டம் ஆடி அசத்தினர்.

Update: 2024-06-18 15:32 GMT

வள்ளி கும்மி ஆட்டம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பவானி பிரிவு சாலையில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்று விழா நடந்தது. சங்ககிரி பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் சந்திரா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் தங்கமுத்து, சங்ககிரி பேரூராட்சி தலைவர் மணிமொழி, பேரூராட்சி துணைத் தலைவர் அருண் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இதில், ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் தலைமையில் 14 வது வார்டு உறுப்பினர் கவிதா உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் பாரம்பரிய உடை அணிந்து வள்ளி கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News