ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நடனம்

ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.

Update: 2023-10-30 07:56 GMT

வள்ளி கும்மியாட்டம்,

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க நாட்டுப்புற கலைகள் வள்ளி கும்மியாட்டம்,பவள கும்மி,ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவை கோவை,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் ஆடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக வள்ளி முருகன் கலைக்குழுவின் ஆசிரியர் பழனிச்சாமி, இணை ஆசிரியர் ரங்கநாதன் உள்ளிட்டோர் ஆர்வம் உள்ளவர்களுக்கு வள்ளி கும்மி ஆட்டத்தை இலவசமாக பயிற்றுவித்து வருகின்றனர்.இந்த ஆட்டத்தை கற்றுக் கொண்ட மாணவர்களின் 25 வது அரங்கேற்ற விழா அன்னூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆண்கள்,பெண்கள், சிறுவர்,சிறுமியர் என ஆயிரம் நடன கலைஞர்கள் ஒரு சேர வயது பாரம்பரிய கும்மி பாடல்களுக்கு ஒரே மாதிரியான நடன அசைவுகளுடன் நடனம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது. அரங்கேற்ற விழாவில் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம்பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு ரசித்தனர்.
Tags:    

Similar News