பூலாம்பட்டி பகுதியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்

பூலாம்பட்டி பகுதியில் வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது

Update: 2024-01-14 16:08 GMT

வள்ளி கும்மியட்டாம்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் நடைப்பெற்ற கொங்கு மண்டலத்தின் பாரம்பரியமிக்க வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்வினை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் துவக்கி வைத்தார். முன்னதாக ஓடக்காட்டூர், பூலாம்பட்டி, கன்னிவாய்க்கால்  உட்பட நான்கு இடங்களில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொடியினை ஏற்றி வைத்த ஈ.ஆர்.ஈஸ்வரன்  பின்னர் அக்காட்சியின் அலுவலகத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்பித்தார்.

அதன் பின்னர் வெள்ளக்கவுண்டனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தின் அரங்கேற்ற நிகழ்வினை முருகப்பெருமானை வழிபட்டு துவக்கி வைத்து சிறப்பித்தார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்த ஈ.ஆர்.ஈஸ்வரன் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளிக்கும்மி ஆட்டம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும்,  வருகின்ற பிப்ரவரி 4ம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைப்பெறவுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பெண்கள் வள்ளிக்கும்மி ஆட்டம்  நிகழ்வில் பங்கேற்று உலக சாதனை புரிய போவதாகவும், 

பூலாம்பட்டிக்கும் நெருஞ்சிபேட்டைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் எனவும், பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட உள்ளதாகவும் இதனை தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அப்போது ராஜ்குமார் உட்பட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்...

Tags:    

Similar News