வள்ளி கும்மியாட்ட நடன கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது

கோவை அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-26 15:45 GMT

 கோவை அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை:மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சிகளை கோவில் திருவிழாக்களில் பத்ரப்பன் நடத்தி வருகிறார்.தற்போது இவர் 200க்கும் மேற்பட்டோருக்கு கற்றுக் கொடுத்த வள்ளி கும்மியாட்டம் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் நிலையில் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வள்ளி கும்மியாட்ட கலைஞர் பத்ரப்பன் கூறுகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது மற்ற கலைத்துறைகளில் உள்ளவர்களுக்கும் ஊக்கத்துடன் செயல்பட துணை புரியும் என்றார். இந்த நிலையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பத்ரப்பனை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல் முருகன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News