வேன்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு: 5 போ் காயம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேனும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா்.
Update: 2024-04-16 10:58 GMT
திருச்சியில் இருந்து சேலம் நோக்கி பாா்சல் சா்வீஸ் வேன் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. இதேபோல், நாமக்கல் மாவட்டம், அணியாபுரம், ஏ.சி.டி நகரை சோ்ந்த ராமராஜ் மனைவி சரசு (52), இவரது மகன்கள் ரகுபதி (28), ரமேஷ் (25), சண்முகம் (20) ஆகியோா் ஒரு காரில் சமயபுரம் கோயில் நோக்கி புறப்பட்டனா். திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் தொட்டியம் அருகே மணமேடு அடுத்த அடைக்கலம் காத்த அம்மன் கோயில் அருகே வேனும் காரும் எதிா்பாராமல் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் காரில் வந்தவா்கள் பலத்த காயமடைந்தனா். இவா்களில் சண்முகம் காரின் இடிபாடுகளில் சிக்கினாா். விபத்து குறித்து தகவலறிந்த முசிறி தீயணைப்பு நிலைய அலுவலா் கா்ணன் தலைமையில் சென்ற வீரா்கள் மற்றும் முசிறி, தொட்டியம் காவல்துறையினா் இணைந்து சண்முகம் மற்றும் காயமடைந்தவா்களை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவிக்கு பிறகு ரகுபதி, ரமேஷ், சரசு ஆகிய மூவரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். பலத்த காயமடைந்த சண்முகம் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். பாா்சல் வேன் ஓட்டுநரான திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் ஐயப்பா (45) மற்றும் கிளீனா் திருச்சி முத்தரசநல்லூரை அடுத்த கூடலூரைச் சோ்ந்த கருப்பன் மகன் சிலம்பரசன் (29) ஆகிய இருவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.