வந்தவாசி: திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா
Update: 2023-11-15 06:58 GMT
கலைஞர் நூற்றாண்டு விழா
திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதையொட்டி கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் முறையான அழைப்பிதழ் கொடுத்து மாணவர்கள் பட்டியலை தயார் செய்ய மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இஎஸ்டி கார்த்திகேயன், மாவட்டத் துணை அமைப்பாளர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கினார்.உடன் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஷர்புதீன் உள்ளிட்டோர் இருந்தனர்.