துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு

வந்தவாசியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-04-08 03:25 GMT

 கொடி அணிவகுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலமானது வந்தவாசி கோட்டை மூலை, குளத்துமேடு பகுதி, பாலு உடையார், சன்னதி தெரு, தேரடி பகுதி, பஜார் சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News