வான்நோக்குவோம் வாருங்கள் நிகழ்ச்சி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான்நோக்குவோம் வாருங்கள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க விக்கிரவாண்டி ஒன்றியத்தின் சார்பில் வான் நோக்குவோம் வாருங்கள் என்ற நிகழ்ச்சி 10 நாட்கள் நடை பெற்றது. இந்நிகழ்வின் நிறைவு நாள் நிகழ்ச்சி முண்டியம்பாக்கத்தில் நேற்று நடந்தது. பல்வேறு கிராமங்களில் மாலை நேரங்களில் வான்நோக்கும் தொலைநோக்கியுடன் சென்று சந்திரன், வியாழன் இன்னும் பிற விண்மீன்கள் பொதுமக்களுக்கும், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கும் தொலைநோக்கி மூலமாக காண்பிக்கப்பட்டு வானவியல் சம்பந்தமாக கருத்துக்களும், கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட துணைத்தலைவர் ஆசிரியர் அய்யனார் ஒருங்கிணைத்தார். கருத்தாளர்களாக அருள், முருகன், சிவமுருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செயல் பட்டனர். ஒருங்கிணைப்பு குழுவாக ஜீவா, விஜய், மாலதி, நாமதே வன் ஆகியோரும் ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் அறிவியல் இயக்க ஆர்வலருமான செந்தமிழ் செந்தில், மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவமுருகன், சண்முகசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.