பட்டா வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

பட்டா வழங்க அத்துமீறிய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-01-23 10:19 GMT

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோளையன் மகன் கருப்பன் (48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1997 ம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 20 சென்ட் புஞ் விண்ணப்பித்தார். 20. 12.2023 ம் தேதி இணையதளத்தில் பார்த்தபோது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் கருப்பன் தனிப்பட்டா வேண்டி மீண்டும் 19.1.2024ம் தேதி இணையதளத்தில் விண்ணப்பித்தார்.அவரது விண்ணப்பத்தின் நிலை குறித்து 22.1.2024 ம் தேதி பார்த்தபோது சம்பந்தப்பட்ட வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தனது மனு நிலுவையில் இருப்பது தெரியவந்ததால் கருப்பன் வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்த விஏஓ சோலை ராஜ் என்பவரை சந்தித்து தனது பட்டா மாறுதல் குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு விஏஓ சோலை ராஜ் உங்களுக்கு பட்டா மாறுதல் கிடைப்பதற்கு நான் தயார் செய்து அனுப்பி வைத்தால் தான் தனிப்பட்டா உங்களுக்கு கிடைக்கும் அதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். பின்னர் விஏஓ சோலை ராஜ் மூவாயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ஏழாயிரம் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் பண்ணித் தர முடியும் என்று உறுதியாக கூறி விட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பன் திருச்சிலஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் குழுவினருடன், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில், கருப்பனிடமிருந்து விஏஓ சோலை ராஜ் இன்று காலை லஞ்ச பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதற்கு புரோக்கராக செயல்பட்ட பாஸ்கர் என்பவரையும் பிடித்து போலீசார் விசாரிக்கிறார்

Tags:    

Similar News