வரதராஜபுரம் ஏரி படுமோசம்: துார்வாரி சீரமைக்க கோரிக்கை
வரதராஜபுரம் ஏரி படுமோசமாக உள்ளதால், துார்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.;
குப்பைகள் குவிந்துள்ள ஏரி
பூந்தமல்லி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள ஏரிநீரை பயன்படுத்தி, அப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன், 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டது. நாளடைவில் விவசாயம் கைவிடப்பட்டதால், வரதராஜபுரம் ஏரி பராமரிப்பின்றி உள்ளது.
மேலும், ஏரிக்கரை முழுதும் கருவேல மரமும், ஏரியின் உள்ளே ஆகாயத்தாமரையும் வளர்ந்து ஏரி துார்ந்துள்ளது. மேலும், வரதராஜபுரம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள், ஏரிக்குள் கொட்டி எரிக்கப்படுகின்றன. இதனால் ஏரிநீர் மாசடைந்துள்ளது. குப்பை கழிவுகளை அகற்றி, ஏரியை துார்வாரி ஆழ்ப்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மேலும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் மாறும். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஏரியை துார்வாரி பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.