ஸ்ரீ வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா

குடவாசல் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-05-18 10:09 GMT

வீதி உலா

குடவாசல் ஸ்ரீதேவி ஸ்ரீ பூமி தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வருடாந்திர வைகாசி பிரமோற்சவம் அங்குரார் பணம் வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. மூன்றாம் நாள் காலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் பல்லக்கில் புறப்பாடகி அருள் பாலித்தார்.

தொடர்ந்து பெருமாளுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. இரவு ஸ்ரீ வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை புரிந்தார்.

Tags:    

Similar News