பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் - அமைச்சர் துவக்கி வைப்பு
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பூமி பூஜை செய்து மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.;
Update: 2024-01-05 08:08 GMT
பணிகள் துவக்கம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி தீத்தாம்பாளையம் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானியத் திட்டத்தின் கீழ் 17 நகராட்சி பள்ளிகளில் பராமரிப்பு பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கீழ் வார்டு எண் 2 கல்லாங்காட்டுவலசு காலனியில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியினையும்,வார்டு எண் 20 ல் அகலரப்பாளையம் புதூரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிகளையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் கனியரசிமுத்துக்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.