56வது வார்டில் ரூ.2.25 கோடியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள்

சேலம் மாநகராட்சி 56வது வார்டில் ரூ.2.25 கோடியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Update: 2024-02-15 04:04 GMT

சேலம் மாநகராட்சி 56வது வார்டில் ரூ.2.25 கோடியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா டையிங் வீதி மற்றும் களரம்பட்டி 4-வது மெயின் ரோட்டின் இருபுறமும் ரூ.1 கோடியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவரும், வார்டு கவுன்சிலருமான சரவணன் நேற்று பார்வையிட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- 56-வது வார்டையும், 45-வது வார்டையும் இணைக்கும் விதமாக புதிய பாலம் கட்டப்பட்டு உள்ளது. புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மருத்துவ வசதிகளும் சிறப்பான முறையிலும், நிறைமாத கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்கு 54 முதல் 58-வது வார்டு வரை 5 வார்டு மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருங்கல்பட்டி 1,2-வது தெரு, மூசுக்காடு, சாம்பலிங்க தெரு பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளன. கலைஞர் நகர் 1 முதல் 6-வது தெரு வரை சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு, தார்ச்சாலை, சங்கர் பிலிம்ஸ் சாலையில் தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

அதன்படி கடந்த 2½ ஆண்டுகளில் 56-வது வார்டு மக்களுக்கு இது வரை ரூ.2 கோடியே 27 லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

Similar News