சங்கரன்கோவில் விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்
சங்கரன்கோவில் சித்தி விநாயகா் கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்த்ர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-18 03:35 GMT
தென்காசி மாவட்டம் சஙகரன்கோவிலில் திருவள்ளுவா் நகரில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் 2ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், மகா கணபதி ஹோமம், திரவ்யாஹுதி, பூா்ணாஹுதி உள்பட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் விமானத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சித்தி விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருவள்ளுவா் நகா், திருவுடையான் சாலை 1ஆம் தெரு பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.