சாய் பாபா கோவிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், மேலவாணியங்குடியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-01 11:02 GMT

வருசாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், மேலவாணியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக சாய்பாபா சுவாமி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து சாய்பாபாவின் மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் பழங்கள் பூர்ணகுதி சமர்ப்பித்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று சாய்பாபா சுவாமிக்கு பால், பன்னீர் மற்றும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து ஏக முக தீப ஆராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சாய் பாபா சுவாமியை வழிபட்டனர்.

Tags:    

Similar News