பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழா

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.;

Update: 2024-05-18 04:30 GMT

பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழா

விழாவை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் பால்குடம் ஏந்தி மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர். அங்கு, சுவாமிக்கு 108 வலம்புரி சங்குகள் மற்றும் பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேள்வி, மாவிளக்கு, கன்னிகா பூஜைகள் நடத்தி, சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர், உற்சவர் சுவாமிகள் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கோவில் நிர்வாக தலைவர் ரவீந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News