வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க கோரி விசிக ஆர்ப்பாட்டம்

தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, ரூ. 21,000 கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-05 07:27 GMT
 விசிக  ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரம் பேருந்துநிறுத்தம் முன்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் 21,000 கோடி ரூபாய் நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க கோரியும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை அகற்றி மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த கோரி விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் சந்திரன், செல்வின் ஏசுதாஸ், இனியவன், பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன் கண்டண உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர்கள் மனித நேயன், சரவணன், தர்மர், மகாராஜன், சாது முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் தேவா, எழுச்சி வேந்தன், தடா மணிமாறன், ஞானகுரு, லிங்கசாமி, லூர்துராஜ், சின்னப்பராஜ், நகர செயலாளர்கள், பாண்டியராஜன், தியாகி மைக்கேல், மற்றும் மாமன்ற உருப்பினர்கள், தமிழ் வளவன், அசோக், செல்வக்குமார், முத்தரசு, தீபன், உள்ளிட்ட மாநில,மாவட்ட,ஒன்றிய,பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News