சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாஜக அரசை கண்டித்து சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
Update: 2024-03-16 05:31 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாநகர செயலாளர் காஜா மொய்தீன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் இமயவர்மன் முன்னிலை வகித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி ஈழ தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் துரோகம் இழைத்ததாக கூறி, பா.ஜனதா அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மொழியரசு, மெய்யழகன், சுப்பையா, சுந்தர், தெய்வானை உள்பட பலர் கலந்து கொண்டனர்.