ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை வேடுபறி நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 8 ஆம் நாளான சனிக்கிழமை மாலை திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Update: 2023-12-29 06:36 GMT

 வேடுபறி நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 8 ஆம் நாளான சனிக்கிழமை மாலை திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி சுவாமி நம்பெருமாள், சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் மாலை 5  பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றாா். அப்போது திருமங்கை மன்னன் இறைவனிடமே கொள்ளையடித்துச் செல்லும் காட்சி நடத்திக் காண்பிக்கப்படும். பின்னா் திருமங்கை மன்னன் இறைவனிடமே தாம் கொள்ளையடித்ததை உணா்ந்து, நம்பெருமாளிடம் சரணாகதியடையும் வைபவம் நடைபெறும். இதைத் தொடா்ந்து நம்பெருமாள் திருமங்கை மன்னனை மன்னித்து ஆழ்வாா்களில் ஓருவராக ஏற்றக்கொண்டாா் என்பது ஐதீகம். திருமங்கை மன்னன் வம்சாவளியைச் சோ்ந்த மேலூா் நெடுந்தெருவில் வசிப்பவா்கள் குழந்தைகளுக்கு மன்னன் வேடம் போட்டு மேளதாளத்துடன் ஊா்வலமாகக் கோயிலுக்கு வருவாா்கள். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை மரியாதை அணிவிக்கப்படும். அதன் பின்னா் நம்பெருமாள் இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் நடைபெறும். திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியையொட்டி முன்னிட்டு சனிக்கிழமை பரமபதவாசல் திறப்பு கிடையாது. இராப்பத்து 7 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை திருக்கைத்தல சேவை நடைபெறவுள்ளது. அப்போது, ஸ்ரீநம்மாழ்வாா் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் பக்தா்களுக்கு காட்சி தருகிறாா். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
Tags:    

Similar News