வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்துடன் ஐயப்பனின் பாதுகாவலர் வீரபத்திரசாமி கோயிலுக்கும் கும்பாபிஷேகம் வேண்டும்

பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்

Update: 2023-12-21 01:48 GMT

கும்பாபிஷேகம் நடத்த கோரி மனு

மயிலாடுதுறை அருகே அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது. தலபுராணத்தின்படி பாலசாஸ்தாவான ஐயப்பன் பிறந்த ஊர் வழுவூராகும்.. ஐயப்பனின் பாதுகாவலரான வழிக்கரையான் எனப்படும் வீரபத்திர சுவாமிக்கும் இவ்வூரில் கோயில் உள்ளது. அந்தக் கோயில் சிதிலமடைந்த நிலையில் கிடக்கிறது. வீரட்டேசுவரர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக பணிகளை ,இந்து அறநிலையத்துறையினர் செய்துவருகின்றனர். அத்துடன் வழிக்கரையான் கோயிலுக்கும் திருப்பணிகள் செய்து, இரண்டு கோயிலுக்கும், ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், என அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் ,ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன், தலைமையில் வழிக்கரையான் வேடமணிந்த ஒருவருடன், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று, மனு அளித்தனர். அரசிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
Tags:    

Similar News