புளியங்குடி அருகே வாகன விபத்து: தம்பதியினர் படுகாயம்

புளியங்குடி அருகே வாகன விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.;

Update: 2024-02-27 14:05 GMT
புளியங்குடி அருகே வாகன விபத்து: தம்பதியினர் காயம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி வியாசா கல்லூரி அருகில் நேற்று மாலை ராஜபாளையத்தைச் சேர்ந்த கணேசன்(77) மற்றும் அவரது மனைவி கோமதி (63) ஆகியோர் வாடகை வாகனத்தில் தென்காசி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த கணேசன், கோமதி ஆகியோர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்த தம்பதியினரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து புளியங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வருகின்றனர்.

Tags:    

Similar News