அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வாகன பேரணி
அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வாகன பேரணி -கலெக்டர் பிருந்தா தேவி பங்கேற்பு.
Update: 2024-04-04 15:24 GMT
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் தனியார் கல்லூரி சார்பில் இருசக்கர வாகன பேரணி காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது. பேரணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பிருந்தாதேவி, மாநகர காவல் துறை ஆணையர் விஜயகுமாரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய பேரணியானது நான்குரோடு, புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன், ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, சுந்தர்லாட்ஜ் வழியாக மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.